ADDED : ஆக 23, 2024 04:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாடிப்பட்டி: அலங்காநல்லுார் குறுவட்ட விளையாட்டுப் போட்டிகளில் வாடிப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் பங்கேற்றனர்.
இதில் 17, 19 வயது பிரிவு ஹாக்கியில் முதலிடம் பிடித்து மாவட்ட போட்டிக்கு தேர்வாகினர். 14 வயது பிரிவில் 2ம் இடம், 19 வயது கோகோ, 17 வயது எறிபந்து போட்டிகளில் 2ம் இடம் பிடித்தனர். வென்ற மாணவியர், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் சந்திரமோகன், பாண்டியம்மாள், வனிதாவை தலைமை ஆசிரியை திலகவதி, உதவி தலைமை ஆசிரியர்கள் பிரேமா, பாரதி, திலகவதி உட்பட பலர் பாராட்டினர்.