ADDED : மே 31, 2024 05:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாடிப்பட்டி : சமயநல்லுார் சடச்சி அம்மன் கோயில் தெரு வேல்முருகன் மகன் செந்தில்நாதன் 19, கல்லுாரி 2ம் ஆண்டு மாணவர்.
இவரது நண்பர்கள் தாமஸ், ஜெயசூர்யா, அரவிந்தன் 19. அரவிந்தன், தாமஸிடம் வாங்கிய ரூ.600 ஐ தரவில்லை. நேற்று முன்தினம் பணத்தை திருப்பி கேட்டு வீட்டிற்கு சென்ற நண்பர்களை அரவிந்தன் தாக்கினார். பின் அரிவாள் எடுத்து விரட்டியபோது சிக்கிய செந்தில்நாதன் கை மற்றும் முதுகு பகுதியில் வெட்டினார். மதுரை அரசு மருத்துவமனையில் செந்தில்நாதன் சிகிச்சை பெறுகிறார். சமயநல்லுார் போலீசார் அரவிந்தனை கைது செய்தனர்.