ADDED : ஜூலை 06, 2024 06:12 AM
மதுரை : மதுரையில் தென்மாவட்ட இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு பாரம்பரிய விதைகளை சேகரித்து சேமித்து வைக்கும் விதை வங்கியை உருவாக்கி, புவிசார் குறையீடு பெற்றுத் தருவதை இலக்காக கொண்டு செயல்படுகிறது. தென்மாவட்ட பகுதியில் அதலைக்காய், எஸ்.சென்னம்பட்டியில் பாகல், எட்டுநாழி மற்றும் காரைக்கேணியில் கத்தரிக்காய், செங்கப்படையில் வரகு ஆகிய மரபு ரகங்களை பாதுகாத்து வருகின்றனர்.
இதன் ஒரு முயற்சியாக இந்தாண்டு விதைத் திருவிழாவை ஆடிப்பிறப்பு நாளில் (ஜூலை 17) நடத்த ஏற்பாடு செய்துள்ளனர். சுற்றுச்சூழல், இயற்கை விவசாயத்தை பாதுகாக்க மதுரை காமராஜ் பல்கலை ரூசா அரங்கில் காலை 8:00 முதல் மாலை 6:00 மணி வரை நடைபெறும்.
இதில் கண்காட்சியில் 150 வகை காய்கறிகள், ஆயிரம் மரம் வகைகள், 600 கிழங்கு வகைகள், 10 ஆயிரம் மூலிகைகளுக்கான விதைகள் காட்சிப்படுத்தப்பட உள்ளன என தலைவர் காளிமுத்து தெரிவித்தார். தொடர்புக்கு: 99435 95340.