ADDED : ஏப் 28, 2024 03:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை பாண்டியன் சரஸ்வதி கல்லுாரியில் பொறியியல் தொழில்நுட்பத்துறையின் இன்றைய வளர்ச்சி நிலை' குறித்த சர்வதேச கருத்தரங்கம் நடந்தது.
முதல்வர் ராஜா வரவேற்றார். குழும நிறுவனர் மலேசியா பாண்டியன் தலைமை வகித்தார். நிர்வாக இயக்குநர்கள் சரவணன், வரதராஜன் முன்னிலை வகித்தனர். லண்டன், மிடில்செக்ஸ் பல்கலை இணை பேராசிரியர் ஜிங் சிங் யாங் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். செயற்கை நுண்ணறிவு வடிவமைப்பு பொறியியல் துறையில் பயன்படுத்தும் நுட்பங்கள் குறித்து விளக்கப்பட்டது.

