ADDED : ஆக 07, 2024 05:27 AM
பெருங்குடி : மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லுாரி கணிதத் துறை சார்பில் 'கணிதத்தின் முன்னேற்றங்கள் மற்றும் பயன்பாடுகள்' என்ற தலைப்பில் தேசிய கருத்தரங்கு நடந்தது.
கல்லுாரி முதல்வர் சந்திரன் துவக்கி வைத்தார். துணை முதல்வர் கணேசன் முன்னிலை வகித்தார். கணிதத்துறை தலைவர் முத்துக்குமரன் வரவேற்றார்.
சென்னை சிப்காட் ஐ.டி., பார்க் கணித பேராசிரியர் செந்தாமரைக்கண்ணன், வேதாரண்யம் அரசு கல்லுாரி முதல்வர் காமராஜ் பேசினர்.
டாமன் அரசு கல்லுாரி பேராசிரியர் சத்யா, காணொளி காட்சி மூலம் விளக்கம் அளித்தார். மூத்த பேராசிரியர் வீரம்மாள் நன்றி கூறினார்.
பேராசிரியர்கள் வில்சன் பாஸ்கர், பத்மாவதி, கலாநிதி, மீனா, அங்காள ஈஸ்வரி, தீனா, முஹம்மது அலி முகாம் ஏற்பாடுகள் செய்தனர். ஏராளமான மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், பேராசிரியர் ஆய்வு கட்டுரை சமர்ப்பித்தனர்.