ADDED : ஜூலை 26, 2024 06:30 AM

மதுரை: மதுரை மாவட்ட ஹெர்குலஸ் ராஜாராம் நினைவுக் கோப்பைக்கான 68வது சீனியர் பளு துாக்கும் போட்டி, வரதராஜன் நினைவுக் கோப்பைக்கான 34வது இளையோர், 20வது மிக இளையோர் பளு துாக்கும் போட்டிகள் மதுரை சவுராஷ்டிரா மேல்நிலைப் பள்ளியில் நடந்தன. மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா தொடங்கி வைத்தார். மாநில பளு துாக்கும் சங்க செயலாளர் சண்முகவேல், ஒலிம்பிக் பளு துாக்கும் வீரர் கபீர், பள்ளிநிர்வாகக் குழு உறுப்பினர் ரகுநாத் முன்னிலை வகித்தனர். 10 உடற்பயிற்சிப் பள்ளிகளைச் சேர்ந்த 65 பேர் கலந்து கொண்டனர்.
போட்டி முடிவுகள்
ஆடவர் 49 கிலோ எடை பிரிவில் லோகராஜ் முதலிடம் பெற்றார். 55 கிலோ பிரிவில் யோகராஜ், 61 கிலோவில் வெங்கடேஷ், 67 கிலோவில் அமர்ஜித், 73 கிலோவில் சபரிநாதன், 81 கிலோவில் ஜனார்த்தனன், 89 கிலோவில் கார்த்திக், 96 கிலோவில் விக்ரம், மகளிர் 40 கிலோ பிரிவில் ஆனந்தலட்சுமி, 45 கிலோவில் மகேஸ்வரி, 49 கிலோவில் ரக் ஷனா தேவி, 55 கிலோவில் அனுஷ் பிரீத்தி, 64 கிலோவில் சந்தியா, 71 கிலோவில் தீபிகா, 76 கிலோவில் சிநேகா, 81 கிலோவில் சிவரஞ்சனி, 87 கிலோ பிரிவில் அர்ச்சனா முதலிடம் பெற்றனர். இவர்கள் ஆக.,9 முதல் 11 வரை வேலுாரில் நடைபெற உள்ள மாநில பளு துாக்கும் போட்டியில் பங்கேற்கின்றனர்.
20 வயது ஆடவர் ஜூனியர் பளு துாக்கும் போட்டியில் ஆஞ்சநேயர் பள்ளி வீரர் யோகராஜ் 55 கிலோ எடை பிரிவில் மொத்தம் 185 கிலோ துாக்கி வரதராஜன் சுழற்கோப்பையை வென்றார். ஆடவர் சீனியர் பளு துாக்கும் போட்டியின் 109 கிலோ எடை பிரிவில் சவுராஷ்டிரா பள்ளியின் சக்தி பிரணவ் 255 கிலோ எடை துாக்கி சிறந்த பளு துாக்கும் வீரராக தேர்வானார். மகளிர் 59 கிலோ பிரிவில் சவுராஷ்டிரா பள்ளி செல்வ ஜெயஸ்ரீ 118 கிலோ எடை துாக்கி சாதனை படைத்தார்.
நிலையூர் சவுராஷ்டிரா பள்ளி 182 புள்ளிகளை பெற்று கோப்பையை தக்க வைத்தது. மதுரை சவுராஷ்டிரா சிலம்பப் பள்ளி 134 புள்ளிகளுடன் இரண்டாமிடம் பெற்றது. நடுவர்களாக பாலகிருஷ்ணன், சந்திரசேகரன், கிருஷ்ணமாச்சாரி பங்கேற்றனர். பூமிநாதன் எம்.எல்.ஏ., பரிசு வழங்கினர். மாவட்ட பளு துாக்கும் சங்கத் தலைவர் நீதிசேகர், செயலாளர் ஆனந்தகுமார், துணைத் தலைவர் கண்ணன் கலந்து கொண்டனர்.