ADDED : ஜூலை 24, 2026 06:10 PM
அ நிறம் | அளவு
உசிலம்பட்டி: உசிலம்பட்டி நகராட்சி, எழுமலை பேரூராட்சி துாய்மை பணியாளர்களுக்கான மேம்பாடு சேவை முகாம் உசிலம்பட்டியில் நடந்தது.
எம்.எல்.ஏ., விஜய், நகராட்சி துணைத்தலைவர் தேன்மொழி, சுகாதார ஆய்வாளர் சிவக்குமார், எழுமலை பேரூராட்சி செயல் அலுவலர் ஜெயமுருகன் பங்கேற்றனர். தொட்டப்பநாயக்கனுார் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் இதயராணி தலைமையிலான மருத்துவக் குழுவினர் துாய்மை பணியாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தினர். துாய்மை பணிக்கான உபகரணங்கள், மருத்துவ காப்பீட்டுச் சான்றிதழ் வழங்கினர்.
