/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஒற்றைச்சாளர விண்ணப்பங்களுக்கு தீர்வு மதுரை மாவட்ட தொழில் மையம் மூலம்
/
ஒற்றைச்சாளர விண்ணப்பங்களுக்கு தீர்வு மதுரை மாவட்ட தொழில் மையம் மூலம்
ஒற்றைச்சாளர விண்ணப்பங்களுக்கு தீர்வு மதுரை மாவட்ட தொழில் மையம் மூலம்
ஒற்றைச்சாளர விண்ணப்பங்களுக்கு தீர்வு மதுரை மாவட்ட தொழில் மையம் மூலம்
ADDED : ஆக 24, 2024 04:05 AM
மதுரை: புதிய தொழில் முனைவோருக்கான அரசுத்துறை ஆவணங்கள், ஏற்கனவே தொழில்செய்வோரின் ஆவணங்கள் புதுப்பித்தலுக்கு மதுரை மாவட்ட தொழில் மையம் மூலம் தீர்வு காணப்படுகிறது.
மாவட்டத்தில் உற்பத்தித் தொழில் மற்றும் சேவைத்தொழில் செய்பவர்கள் ஏற்கனவே மத்திய அரசின் உத்யம் சான்றிதழ் பெற்றிருப்பர். அவர்கள் www.tnswp.com மூலம் தொழிற்சாலை துவங்குவதற்கான தொழில்பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறை, தீயணைப்பு துறை, உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு துறை, டிரான்ஸ்பார்மர், ஜெனரேட்டர் போன்றவற்றுக்கான (ஹை டென்சிட்டி) சான்றிதழ், பாய்லர் இன்ஸ்பெக்டர் சான்றிதழ், தொழிலாளர் துறை சான்றிதழ் பெற ஆன்லைனில் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.
இந்த விண்ணப்பங்கள் மதுரை மாவட்ட தொழில் மையம் மூலம் கண்காணிக்கப்பட்டு தாமதம் ஏற்படாமல் சான்றிதழ் வழங்க ஏற்பாடு செய்யப்படுகிறது என்கிறார் பொது மேலாளர் கணேசன். அவர் கூறியதாவது:
தமிழக அரசின் ஒற்றைச்சாளர இணையம் மூலம் மதுரையில் இருந்து அனுப்பப்படும் விண்ணப்பங்களை கண்காணிக்கிறோம். 2023 ஜன. 1 முதல் 2024 ஜூலை 4 வரை 1554 தொழில் முனைவோருக்கு அனைத்து சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள்ளது. உணவுப் பாதுகாப்பு துறைக்கு விண்ணப்பித்த 1640 பேரில் 1520 பேருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. 20 பேருக்கு தீயணைப்பு துறை, மருந்து கட்டுப்பாட்டு துறைக்கு விண்ணப்பித்த 1649 பேரில் 1520 பேருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. டி.டி.சி.பி., துறைக்கு யாரும் விண்ணப்பிக்க வில்லை. மாசுகட்டுப்பாட்டு வாரியத்திற்கு விண்ணப்பித்த ஒருவருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
தொழில்முனைவோர் ஒவ்வொரு துறை அலுவலகமாக சென்று விண்ணப்பங்களை நேரில் கொடுத்து சான்றிதழ் பெறுவதை விட ஆன்லைன் போர்ட்டலில் விண்ணப்பித்தால் எளிதாக சான்றிதழ் பெறலாம். எந்த இடத்தில் சான்றிதழ் பெறுவதற்கு சிக்கல் உள்ளது என்பதை கண்டறிந்து அதை சரிசெய்ய உதவுகிறோம் என்றார்.