/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கடும் ஊனமுற்றோருக்கு உதவித்தொகை கிடைக்கல
/
கடும் ஊனமுற்றோருக்கு உதவித்தொகை கிடைக்கல
ADDED : மார் 05, 2025 05:48 AM
மதுரை: மதுரை மாவட்டத்தில் ஊனமுற்றோருக்கு பராமரிப்பு உதவித்தொகையை உடனே வழங்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.
மாவட்டத்தில் 58 ஆயிரம் பேர் மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். இவர்களில் 80 சதவீதத்திற்கும் மேலாக கடும் ஊனமுற்றோராக 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உள்ளனர். 40 சதவீத பாதிப்புக்கும் மேலான மனவளர்ச்சி குன்றியோரும் உள்ளனர்.
இவர்களுக்கு அரசு மாத உதவித்தொகை ரூ.2 ஆயிரம் வழங்கி வருகிறது. இத்தொகை கடும் ஊனமுற்றோருக்கு உதவியாளர் ஒருவரின் தேவை உள்ளது. எனவே அத்தகையோருக்கு பராமரிப்புக்கென கூடுதலாக ரூ. ஆயிரம் உதவித்தொகையையும் அரசு வழங்குகிறது.
இத்தொகையை பெற ஓராண்டில் ஆயிரம் பேர் வரை விண்ணப்பித்துள்ளனர். 700க்கும் மேற்பட்டோருக்கு உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. மீதியுள்ளோர் கிடைக்காமல் தவிக்கின்றனர்.
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள், பாதுகாப்போர் உரிமைக்கான சங்க மாவட்ட செயலாளர் பாலமுருகன் கூறுகையில், ''இதற்கென நிதி ஒதுக்காததால் கடும் ஊனமுற்றோருக்கு ரூ. ஆயிரம் பராமரிப்பு தொகை வழங்கப்படவில்லை.
இதுகுறித்து சென்னை நலவாரியத்தில் மனு அளித்தும் தீர்வில்லை. இதற்கு சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு திருப்பரங்குன்றத்தில் இலவச வீட்டுமனை பட்டா கேட்டு நாலைந்து முறை மனு அளித்து ஆண்டுகளை கடந்தும் கிடைக்கவில்லை. அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகையை ரூ. 6 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும்'' என்றார்.