
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உசிலம்பட்டி : உசிலம்பட்டி - மதுரை ரோட்டின் இருபுறமும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடந்தது.
முறையாக வடிகால் அமைக்காததால் தாழ்வான பகுதிகளில் மழைநீரும், கழிவுநீரும் வெளியேறுகிறது. சிறிதளவு மழை பெய்தாலும் அரசு பஸ் டெப்போவிலும், ரோட்டிலும் கழிவுநீர் வெளியேறுகிறது.
மேலும் கொங்கபட்டி கிராமத்திற்குள்ளும் கழிவுநீர் வெளியேறுவதால் மக்களும், வாகன ஓட்டிகளும் சிரமத்திற்குள்ளாகின்றனர்.
வடிகால்களை முறையாக சீரமைக்க வேண்டும் என கொங்கபட்டி, கீழப்புதுார் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

