ADDED : மார் 03, 2025 04:02 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் ஒன்றியம் வேடர் புளியங்குளம் காமாட்சி அம்மன் கோயிலில் மாசி மகா சிவராத்திரி விழா பிப். 26ல் துவங்கியது.
முதல்நாள் நிகழ்ச்சியாக அம்மனுக்கு பொங்கல் வைத்தல் சிறப்பு பூஜை, சாமியாட்டம், 2ம் நாள் கும்மியடித்தல், மூன்றாம் நாள் பக்தர்கள் 108 பொங்கல் வைத்தல், அம்மனுக்கு அலங்காரம், தீபாராதனை நடந்தது. நேற்று அம்மனுக்கு மஞ்சள் பால் நீராட்டு, பூஜை முடிந்து சிறப்பு அலங்காரமாகி தீபாராதனை நடந்தது.
அதே பகுதி அழகர்சாமி கருப்பசுவாமி ஆதம்மாள் கோயிலில் மகா சிவராத்திரி விழா முதல் நாள் அம்மனுக்கு மாவிளக்கு வைத்தல், இரண்டாம் நாள் பொங்கல் வைத்தல், கிடா வெட்டும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று அம்மன் பாரி வேட்டை நிகழ்ச்சி நடந்தது.