ADDED : பிப் 27, 2025 01:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விக்கிரமங்கலம்; வி.கோவில்பட்டி மருதோதய ஈஸ்வரமுடையார், சிவநேசவள்ளி கோயிலில் சிவராத்திரி வழிபாடு நடந்தது. நேற்று முன்தினம் மதுரை ஆறுமுகம் குழுவினர் திருவாசகம் முற்றோதல் வழிபாடு செய்தனர். 2500 ஆண்டுகள் பழமையான இக்கோயில் கும்பாபிஷேக பணிக்கு கடந்த ஜூன் 2023ல் பாலாலயம் செய்து திருப்பணிகள் நடந்து வருகிறது.
நேற்று மூலவருக்கு அபிஷேகம், ஆராதனைகளை தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். சுவாமி லிங்கத்தை சுற்றியபடி நாகத்தின் முழுச் சட்டை இரண்டாவது முறையாக இருந்தது. ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்தனர். சிறப்பு பூஜைகளை பூஜாரி பாண்டி செய்தார்.

