தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ ரேஷனில் பற்றாக்குறை தகராறு

ரேஷனில் பற்றாக்குறை தகராறு

ரேஷனில் பற்றாக்குறை தகராறு


ADDED : ஜூலை 15, 2024 05:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 15, 2024 05:52 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பேரையூர் : பேரையூர் தாலுகா ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு, பாமாயில் போன்றவற்றை சரிவர விநியோகம் செய்யாததால் கடைக்காரர்கள், பொதுமக்கள் இடையே அடிக்கடி தகராறு நடக்கிறது.

இத்தாலுகால் 121 ரேஷன் கடைகள் மூலம் 66 ஆயிரம் கார்டுகளுக்கு அரிசி, சர்க்கரை, பாமாயில், கோதுமை உட்பட பல பொருட்கள் வழங்கப்படுகின்றன. ஆனால் துவரம் பருப்பு, பாமாயில் மட்டும் சரிவர வினியோகிப்பதில்லை.

இத்தாலுகாவுக்கு துவரம் பருப்பு 50 சதவீதம், பாமாயில் 40 சதவீதம், வழங்கப்படுகிறது. இதனால் கடைக்காரர்கள் பாதி ரேஷன் அட்டைதாரர்களுக்கு விநியோகம் செய்து, மீதிபேருக்கு வழங்காமல் விடுகின்றனர். 'ரேஷன் விநியோக பொருட்கள் பெற மாதம் மூன்று அல்லது 4 முறை ரேஷன் கடைகளுக்கு அலைய வேண்டியுள்ளது.

தினமும் ஒவ்வொரு பொருளாக வழங்கப்பட்டு வருவதால் அலைக் கழிக்கப்படுகிறோம் என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us