ADDED : ஜூலை 13, 2026 11:53 PM
அ நிறம் | அளவு
அவனியாபுரம்: மதுரை விமான நிலையம் விரிவாக்கம் தொடர்பாக சின்ன உடைப்பு கிராமத்தில் 186 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு 85க்கும் மேற்பட்டோருக்கு இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டது. 2009ல் நில மதிப்பு குறைவாக இருப்பதாகவும் 2016ம் ஆண்டு மதிப்பில் இழப்பீடு வழங்கவும், தங்களுக்கு மீள்குடி அமைவதற்கான இடம் மாநகராட்சி இடத்தில் வழங்க வேண்டும் என இடம் வழங்கியவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நேற்று இடம் கையகப்படுத்துவது தொடர்பாக வருவாய்த்துறையினர் நோட்டீஸ் கொடுக்க வந்தபோது ஊர் நுழைவுவாயின் முன் கற்களை கொட்டி மக்கள் போராட்டம் நடத்தினர். ஒருவர் மரத்தில் ஏறி தீக்குளிக்க முயற்சித்தார். அவரை அப்பகுதியினர் சமரசம் செய்தனர். அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
