/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ரூ.56 லட்சம் மதிப்புள்ளகடத்தல் தங்கம் பறிமுதல்
/
ரூ.56 லட்சம் மதிப்புள்ளகடத்தல் தங்கம் பறிமுதல்
ADDED : மே 11, 2024 06:07 AM

மதுரை: துபாயிலிருந்து மதுரை விமான நிலையத்திற்கு கடத்திவரப்பட்ட ரூ. 56 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
நேற்று முன்தினம் காலை 11: 30 மணிக்கு துபாயிலிருந்து மதுரை வந்த ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாக நுண்ணறிவு பிரிவினருக்கு தகவல் கிடைத்தது. துபாயிலிருந்து வந்த ராமநாதபுரத்தை சேர்ந்த முகமது தஸ்தகீர் 21, சந்தேகத்திற்குரிய வகையில் நடந்து வந்தது தெரிந்தது. அவரை சோதனை செய்ததில் ஆசனவாயிலில் தங்கம் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று ஆசனவாயில் இருந்த பொருளை சோதனை செய்தபோது பேஸ்ட் வடிவில் 790 கிராம் அளவு 24 கேரட் தங்கம் என தெரிய வந்தது. இதன் மதிப்பு ரூ. 55 லட்சத்து 97 ஆயிரத்து 150. அப்பயணியிடம் அதிகாரிகள் விசாரணை செய்கின்றனர்.