ADDED : ஜூன் 24, 2026 05:01 PM
அ நிறம் | அளவு
மேலுார்: மேலுார் அரசு மருத்துவமனையில் ரூ.70 லட்சத்தில் புதிதாக இரண்டு பொதுக் கழிப்பறைகள் கட்டப்பட்டு திறப்பு விழா முடிந்ததோடு சரி, பயன்பாட்டிற்கு வராமல் பூட்டி கிடந்தது.
அதனால் நோயாளிகள் மருத்துவமனை வளாகத்தை கழிப்பிடமாக பயன்படுத்தியதால் துர்நாற்றத்துடன் சுகாதார சீர்கேடாக காணப்பட்டது. இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து நகராட்சி பொறியாளர் முத்துக்குமார் ஏற்பாட்டில் கழிப்பறையை பராமரிக்க ஆட்கள் நியமித்து பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டதால் நோயாளிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
