/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
விநாயகர் சதுர்த்திக்கு சிறப்பு பஸ்கள்
/
விநாயகர் சதுர்த்திக்கு சிறப்பு பஸ்கள்
ADDED : செப் 05, 2024 03:56 AM
மதுரை, : விநாயகர் சதுர்த்தி மற்றும் வார இறுதி விடுமுறை நாட்கள் தொடர்ந்து வருவதையொட்டி செப். 5 முதல் 7 வரை சென்னை கிளாம் பாக்கம் பஸ்ஸ்டாண்டில் இருந்து பல்வேறு இடங்களுக்கு 125 பஸ்களும், திருச்சி, சேலம், ஈரோடு, கோவை, திருநெல்வேலி, நாகர்கோவில் உட்பட பிற இடங்களுக்கு 75 பஸ்களும் இயக்கப்பட உள்ளன.
விடுமுறை முடிந்து செப். 8 அன்று ஊர்திரும்ப ஏதுவாக மதுரை கோட்டத்தின் மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர் மாவட்டங்களில் இருந்து சென்னை கிளாம்பாக்கத்திற்கு 120 பஸ்களும், பிற இடங்களுக்கு 100 பஸ்களும் பயணிகளின் தேவைக்கேற்ப இயக்கப்பட உள்ளன.
மேலும் இப்போக்குவரத்துக் கழகம் மூலம் கொடைக்கானல், கொல்லம், மூணாறு, திருப்பூர், கோவை, மேட்டுப்பாளையம், ஈரோடு, திருச்செந்துார், மன்னார்குடி, கடலுார், நாகூர் வழித்தடங்களில் பயணிகள் சிரமமின்றி செல்ல ஏதுவாக www.tnstc.in/home.html என்ற முகவரியில் முன்பதிவு செய்யலாம். மேலும் பயணிகளுக்கு வழிகாட்டவும், பஸ்களை கண்காணிக்கவும் முக்கிய பஸ்ஸ்டாண்டுகளில் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என, மேலாண் இயக்குனர் சிங்காரவேலு தெரிவித்துள்ளார்.