/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மின்தடை இல்லாமல் ரயில்களை இயக்க மதுரையில் சிறப்பு கட்டுப்பாட்டு அறை
/
மின்தடை இல்லாமல் ரயில்களை இயக்க மதுரையில் சிறப்பு கட்டுப்பாட்டு அறை
மின்தடை இல்லாமல் ரயில்களை இயக்க மதுரையில் சிறப்பு கட்டுப்பாட்டு அறை
மின்தடை இல்லாமல் ரயில்களை இயக்க மதுரையில் சிறப்பு கட்டுப்பாட்டு அறை
ADDED : மே 09, 2024 08:39 AM
மதுரை : மதுரை கோட்ட ஸ்டேஷன்களுக்கு உட்பட்ட பகுதிகளில் மின்தடையில்லாமல் ரயில்களை இயக்க சிறப்பு கட்டுப்பாட்டு அறை மதுரையில் திறக்கப்பட்டுள்ளது.
மின்மய ரயில் பாதைகளில் மின் தடையின்றி ரயில்களை இயக்க மதுரை ரயில்வே ஸ்டேஷன் நிலைய மேலாளர் அறை அருகே சிறப்பு கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டது. இதற்கு மின்சாரம் வழங்கும் தரவுகளை சேகரித்தல், மேற்பார்வை கட்டுப்பாட்டு அறை என பெயரிடப்பட்டுள்ளது.
மின்சாரம் சம்பந்தமான தரவுகளை இணையதளம் வாயிலாக சேமித்து வைக்கும் வசதி உள்ளது.
மின் தடத்தில் ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் மின்சாரத்தை தானாக நிறுத்தி கட்டுப்பாட்டு அறையில் அபாய ஒலி எழுப்பும். உடனடியாக கட்டுப்பாட்டு அறை பணியாளர் ரயில்களை பாதுகாப்பாக இயக்க மேல் நடவடிக்கை எடுப்பார்.
மதுரையில் இருந்தே ஒரு குறிப்பிட்ட பகுதியில் மின்சாரத்தை நிறுத்தி வேறு ஒரு பகுதியிலிருந்து மின்சாரத்தை வழங்கவும் ஏற்பாடு செய்வார்.
இதன் மூலம் ரயில்கள் தாமதம் இல்லாமல் குறித்த நேரத்தில் இயக்க முடியும். மின் வழித்தட விபத்து இல்லாமல் ரயில்களை இயக்க முடியும். மின்சாரத்தை சிக்கனமாகவும் பயன்படுத்த முடியும்.
மதுரை கோட்டத்தில் ராமநாதபுரம்,- ராமேஸ்வரம் பிரிவை தவிர மற்ற பகுதிகளில் ரயில் பாதை மின் மயமாக்கல் பணிகள் நிறைவடைந்து உள்ளன.