ADDED : ஜூலை 14, 2026 05:31 PM
அ நிறம் | அளவு
வாடிப்பட்டி: வாடிப்பட்டி ரயில்வே ஸ்டேஷன் அருகே சொக்கையா சுவாமி ஜீவசமாதியில் ஆனி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது.
விநாயகர், முருகன், சொக்கையா சுவாமிக்கு அபிஷேகம், ஆராதனைகள், அர்ச்சனை நடந்தன. மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பக்தர்கள் பஜனை பாடல் பாடி வழிபட்டனர். அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை மடத்தின் நிர்வாக தலைவர் மணிகண்டன் செய்திருந்தார்.
