/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கால்நடை விவசாயிகளுக்கு சிறப்பு கருத்தரங்கம்
/
கால்நடை விவசாயிகளுக்கு சிறப்பு கருத்தரங்கம்
ADDED : ஆக 07, 2024 05:28 AM
திருப்பரங்குன்றம், : தியாகராஜர் பொறியியல் கல்லுாரி சாலையில் உள்ள கால்நடை பல்கலை பயிற்சி மற்றும் ஆய்வு மையத்தில் முன்னோடி விவசாயிகளுக்கு சிறப்பு கருத்தரங்கம் ஆக.13ல் காலை 10:00 முதல் மாலை 4:00 மணி வரை நடக்கிறது.
இதில் மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, விருநகர் மாவட்ட விவசாயிகள் 75 பேர் பங்கேற்கலாம்.
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை துணைவேந்தர் செல்வகுமார், கால்நடை நலக்கல்வி மைய இயக்குநர் சவுந்தரராஜன், விரிவாக்க கல்வி இயக்குநர், அப்பாராவ் ஆகியோர் விளக்கம் அளிக்க உள்ளனர்.
முன்னோடி விவசாயிகள் பண்ணைகளில் கடைபிடிக்கும், உபயோகப்படுத்தப்படும் தொழில் நுட்பங்களையும், உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்தவும், காப்புரிமை பெறவும் வழிசெய்து தரப்படும். கருத்தரங்கில் கலந்து கொள்ளும் அனைத்து விவசாயிகளுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.
ஒரு மாவட்டத்தில் இருந்து 15 விவசாயிகளே பங்கேற்க முடியும். முதலில் பதிவு செய்தோருக்கே முன்னுரிமை. பங்கேற்க விரும்புவோர் ஆக. 9 வரை காலை 10:00 முதல் மாலை 6:00 மணி வரை முன்பதிவு செய்யலாம்.
தொலைபேசி எண்: 0452- 2483903 அலைபேசி எண்: 088254 05260ல் பதிவு செய்யலாம் என மைய தலைவர் சிவசீலன் தெரிவித்தார்.