ADDED : மே 17, 2026 06:42 PM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை வேளாண்மை கல்லுாரி ஆராய்ச்சி நிலையத்தின் வைரவிழாவை முன்னிட்டு விளையாட்டுப் போட்டிகள் நடந்தன.
கபடி, கூடைப்பந்து, கையுந்து பந்து உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. சிறப்பு விருந்தினராக அர்ஜூனா விருதுபெற்ற மணத்தி கணேசன் போட்டியை துவக்கி வைத்து, மாணவர்களுக்கு விளையாட்டின் முக்கியத்துவம் குறித்து விளக்கினார். 14 வேளாண் உறுப்புக் கல்லுாரி மாணவர்கள் பங்கேற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு முதல்வர் சந்திரமணி பரிசு வழங்கினார். மாணவ மன்ற ஆலோசகர் ஜெயபாலகிருஷ்ணன் ஏற்பாடு செய்தார். விளையாட்டுத்துறை இணை இயக்குநர் செந்தில்குமார் நன்றி கூறினார்.
