ADDED : மே 11, 2024 05:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அழகர்கோவில்: அழகர்கோவில் சோலைமலை முருகன் கோயில் வைகாசி வசந்த உற்ஸவம் மே 13ல் துவங்கி 22 வரை நடக்கிறது.
தினமும் காலை 9:40 மணிக்கு சுவாமிக்கு காப்புக் கட்டுதலும், 11:00 மணிக்கு சண்முகார்ச்சனை நடைபெறும்.
மதியம் 3:00 மணிக்கு சுவாமிக்கு அபிஷேகம், மாலை 4:30 மணிக்கு வள்ளி தெய்வானையுடன் சுவாமி புறப்பாடு நடைபெறும். மாலை 6:00 மணிக்கு தீபாராதனை நடைபெறும்.
ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத் தலைவர் வெங்கடாசலம், துணை கமிஷனர் கலைவாணன், அறங்காவலர்கள் செய்து வருகின்றனர்.