/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஜெயந்தி
/
ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஜெயந்தி
ADDED : பிப் 26, 2025 05:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் 57வது ஜெயந்தி சோழவந்தான் முள்ளி பள்ளம் அக்ரஹாரத்தில் அமைந்துள்ள சங்கர மடத்தில் நடந்தது. விநாயகர் பூஜை, உபநிஷத் பாராயணம், அர்ச்சனை, தீபாராதனை நடந்தது.
மடத்தில் பயிலும் மாணவருக்கு பிரசாதம், கல்விப் பொருட்கள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை நிர்வாகி கே. ஸ்ரீகுமார், பூஜகர் வெங்கட்ராமன், ஆசிரியர் வீர மணிகண்டன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்

