ADDED : ஜூன் 25, 2024 06:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : காஞ்சி காமகோடி மடம் மதுரை கிளையில் ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் மாதாந்திர நட்சத்திர உற்ஸவம் நடந்தது.
காலை 9:00 மணிக்கு உலக நன்மைக்கான ஆவஹந்தி ேஹாமம், ஆயுஷ்ய ேஹாமம், மகா மிருத்யுஞ்சய ேஹாமம் நடந்தன.
தொடர்ந்து சந்த்ர மவுலீஸ்வர சுவாமிக்கு அபிேஷகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. மாலை 6:30 மணிக்கு மீனாட்சி சீனிவாசன் வாய்ப்பாட்டு, ஜெகதீசன் வயலின், விஸ்வநாதன் மிருதங்கத்துடன் கச்சேரி நடந்தது.
நிகழ்ச்சிகளை மடத்தின் தலைவர் டாக்டர் ராமசுப்பிரமணியன், செயலாளர் வெங்கடேசன், பொருளாளர் வெங்கட்ரமணி, நிர்வாகிகள் செய்திருந்தனர்.