ADDED : செப் 04, 2024 06:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : தஞ்சாவூரில் 43வது சப் ஜூனியர் மாநில அளவிலான பூப்பந்து போட்டி நடந்தது. மதுரை மாவட்ட பூப்பந்து கழகம் சார்பில் ஓ.சி.பி.எம். பள்ளி மாணவிகள் தங்கப்பதக்கத்துடன் கோப்பையை கைப்பற்றினர்.
இதன் மூலம் ஹாசினி, கவிப்ரியா மற்றும் ஈரோடு மாவட்டத்திற்காக விளையாடிய ஓ.சி.பி.எம். பள்ளி மாணவி கோபிகா தமிழக அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் ஹரியானாவில் நடக்கும் தேசிய போட்டியில் பங்கேற்கின்றனர். இவர்களை அமைச்சர் சிவசங்கர் பாராட்டினார்.