ADDED : மார் 05, 2025 05:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: மேலுாரில் காவிரி, வைகை, கிருதுமால், குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பின் மாநில செயற்குழுக் கூட்டம் நடந்தது.
பொதுச்செயலாளர் அர்ச்சுனன், மாநில செயலாளர் ராம.முருகன் வரவேற்றனர். மாநில தலைவர் மாரிமுத்து தலைமை வகித்தார். துணைத்தலைவர்கள் பாலகிருஷ்ணன், மச்சேஸ்வரன், பொருளாளர்முருகேசன் முன்னிலை வகித்தனர்.
வைகை அணை துார்வாருதல், விவசாயத்தை அழிக்கும் காட்டு பன்றிகளை கட்டுப்படுத்துதல், தைல மர நடவுகளால் மழை நீர்வரத்து பாதிப்பு, வேலி கருவேல மரங்களை தடை செய்து அழித்தல், காவிரி வைகை குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு நிதி விடுவிப்பு ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.