நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: முதலைக்குளம் 18ம் படியான் கருப்பசாமி கபடி குழு, ஜல்லிக்கட்டு பேரவை இளைஞர் மன்றம் சார்பில் செல்லம்பட்டி நடுமுதலைக்குளத்தில் மாநில கபடி போட்டி நடந்தது.
திறந்தநிலையில் நடந்த நாக் அவுட் போட்டியில் 200 அணிகள் பங்கேற்றன. தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு மாநில கவுரவ தலைவர் ராமன் போட்டியை துவக்கி வைத்தார். விக்கிரமங்கலம் எஸ்.ஐ. அசோக்குமார் முன்னிலை வகித்தார். அய்யப்பன் எம்.எல்.ஏ., மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் முத்துராமன், ஒன்றிய கவுன்சிலர் அரவிந்தன், முதலைக்குளம் ஊராட்சித்தலைவர் பூங்கொடி கலந்து கொண்டனர்.
மகளிர் பிரிவில் அமெரிக்கன் கல்லுாரி முதல் பரிசு பெற்றது. லேடிடோக் கல்லுாரி 2ம் பரிசு, பாத்திமா கல்லுாரி 3ம் பரிசு, மீனாட்சி அரசு கல்லுாரி 4ம் பரிசு, மதுரைக்கல்லுாரி 5ம் பரிசு பெற்றன.