தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மாநில அளவிலான ஒலிம்பிக் போட்டி

மாநில அளவிலான ஒலிம்பிக் போட்டி

மாநில அளவிலான ஒலிம்பிக் போட்டி


ADDED : ஜூலை 16, 2024 04:02 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 16, 2024 04:02 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை : மதுரை கல்லுாரி மைதானத்தில் ஜே.சி.ஐ., மதுரை சென்ட்ரல் அமைப்பு சார்பில் மாநில அளவிலான ஒலிம்பிக் போட்டிகள் நடந்தன.

சேர்மன் ரவிசங்கர் துவக்கிவைத்தார். முன்னாள் தேசிய தலைவர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். மண்டல தலைவர்கள் சுந்தரேஸ்வரன், ஏழுமலை, அசோக்பட், ஷிபி குமார் முன்னிலை வகித்தனர்.

மதுரை மண்டல தலைவர் அர்ஜூன் பாலா வரவேற்றார். ஓட்டப்பந்தயம், குண்டு எறிதல், கூடைப்பந்து, கால்பந்து, கேரம், செஸ், கைப்பந்து உள்ளிட்ட போட்டிகள் நடந்தன. கலப்பு ரிலே ஓட்டப்பிரிவில் சிவசங்கரன், சம்யு, தன்ஷிகா, சந்தோஷ் அணி முதல் பரிசு, ரகு, ரிதேஷ், ருத்தேரஷ், சாஷினி அணி 2ம் பரிசு, சிவபிரகாஷ், ப்ரிஷினி, பூமிகா, கீர்த்தி அணி 3ம் பரிசு வென்றனர்.

குண்டு எறிதலில் விஷ்ணு, ஜசிவ் செய்த், வெங்கடேஷ் முதல் 3 பரிசுகளை வென்றனர். கூடைப்பந்தில் சஞ்சனா, முத்து தீபிகா, வர்ஷன் முதல் 3 பரிசுகளை வென்றனர். கேரம் போட்டியில் ஆண்கள் பிரிவில் சபரிநாத், கோவர்தன், அத்வைத் முதல் 3 பரிசுகளை வென்றனர். பெண்கள் பிரிவில் முத்து தீபிகா, மீனாட்சி, ரஞ்சிதா முதல் 3 பரிசுகளை வென்றனர்.

100 மீ., ஓட்டப் பந்தயத்தில் ஆண்கள் பிரிவில் வர்ஷன், விக்னேஷ், ஷியாம் முதல் 3 பரிசுகளை வென்றனர். பெண்கள் பிரிவில் ரஞ்சிதா, சர்வேஷ்ஸ்ரீ, சஞ்சனா முதல் 3 பரிசுகளை வென்றனர்.

செஸ் போட்டியில் சபரிநாத், மீனாட்சி, அனு முறையே முதல் 3 பரிசுகளை வென்றனர். கிரிக்கெட் ஸ்டம்பிங்கில் ராஜ்குமார், சரவண குமார் முறையே முதல், 2ம் பரிசுகளை வென்றனர்.

கைப்பந்தில் மணிகண்டன் அணி முதல் பரிசையும், விஷ்ணு அணி 2ம் பரிசையும் வென்றனர். கால்பந்தில் (பெனால்ட்டி) பிரபஞ்சன், மணிகண்டன், ஜெயபிரகாஷ், வர்ஷன் அணி முதல் பரிசு, முத்து மணிகண்டன், கோபால கிருஷ்ணன், ஸ்ரீநிவாசன், ராஜா அணி 2ம் பரிசு வென்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us