ADDED : ஜூன் 18, 2024 06:51 AM

மதுரை : மதுரை எல்லீஸ் டேபிள் டென்னிஸ் அகாடமி சார்பில் ராதா நினைவு பள்ளிகளுக்கு இடையிலான மாநில டேபிள் டென்னிஸ் போட்டி மதுரையில் நடந்தது.
மதுரை, திண்டுக்கல், தேனி, துாத்துக்குடி, நாகர்கோவில், ஈரோடு, திருப்பூர், கோவை, புதுச்சேரியைச் சேர்ந்த 130 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
போட்டி முடிவுகள்
ஒன்று முதல் 3ம் வகுப்பு வரையான போட்டிகளில் தேனி ஷிவானி ஸ்ரீ , மதுரை சபரீஷ் முதலிடம், ஈரோடு விர்க்ஷா, மதுரை ஷூகைன் சையதீன் 2ம் இடம், கோவை சாதனா, மதுரை ஹூமேஸ்வர் 3ம் இடம், தேனி தன்விதா ஸ்ரீ, திருநெல்வேலி தன்மித்ரன் 4 ம் இடம் பெற்றனர்.
4ம், 5ம் வகுப்புக்கான போட்டியில் தேனி மிர்தினிகா, ஈரோடு ஹேமந்த் முதலிடம், தன்விகா ஸ்ரீ, மதுரை பிரணவ் பாலாஜி 2ம் இடம், ஷிவானி ஸ்ரீ, ஷூகைன் சையதீன் 3ம் இடம், விர்க்ஷா, சபரீஷ் 4ம் இடம் பெற்றனர். 6 முதல் 8 ம் வகுப்புக்கான போட்டியில் ஈரோடு வருணிகா, ஹேமந்த் முதலிடம், துாத்துக்குடி மகா ஸ்வேதா, மதுரை பிரணவ் பாலாஜி 2ம் இடம், மதுரை நந்திகா, மதுரை ஷூகைப் சைதீன் 3ம் இடம், தேனி தனன்யா, தமிழரசன் 4ம் இடம் பெற்றனர்.
9 முதல் பிளஸ் 2 வரையான போட்டியில் வருணிகா, மதுரை ஆலன் ஜோஸ்வா முதலிடம், மதுரை மாயா அஸ்வத், மதுரை ஜோகிந்திரா 2ம் இடம், தேனி தமிழரசி, தருண் விஜய் 3ம் இடம், மதுரை சிவாத்மிகா, தேனி கார்த்திகேயன் 4ம் இடம் பெற்றனர்.
ஓப்பன் இரட்டையர் பிரிவில் தேனி அருண் விஜய், தருண் ராஜன் ஜோடி முதலிடம், மதுரை ஆலன் ஜோஸ்வா, பவாஷ் அகமது ஜோடி 2ம் இடம், ஈரோடு வருணிகா, கார்த்திகேயன் ஜோடி 3ம் இடம், மதுரை சபரிநாதன், நிதேஷ் ஜோடி 4ம் இடம் பெற்றனர். அகாடமி நிறுவனர் சுந்தர், ஆலோசகர் கல்யாணராமன், செயலாளர் பாலகிருஷ்ணன் ஏற்பாடுகளை செய்தனர்.