ADDED : மார் 22, 2024 05:00 AM
மதுரை: மதுரை வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரியில் மாநில அளவிலான கல்லுாரிகளுக்கு இடையிலான மின்னொளி வாலிபால் போட்டி நடந்தது.
இறுதிப் போட்டியை ராமநாதன் துவக்கி வைத்தார். பொள்ளாச்சி எஸ்.டி.சி., கல்லுாரி 22 - 25, 25 - 22, 25 - 19, 25 - 22 புள்ளிகளில் கோவை கற்பகம் பல்கலை அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. சென்னை சத்யபாமா பல்கலை 3ம் இடம், அமெரிக்கன் கல்லுாரி 4ம் இடம், கோவை என்.ஜி.பி. கல்லுாரி 5ம் இடம், சென்னை லயோலா கல்லுாரி 6ம் இடம் பெற்றன.
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி மண்டல மேலாளர் ஜெபனான்த் ஜூலியஸ் பரிசு, சுழற்கோப்பை வழங்கினார். கல்லுாரிச் செயலாளர் சுந்தர், இயக்குநர் ஸ்ரீதர், முதல்வர் ராஜேந்திரன், மாநில தகவல் ஆணையர் (ஓய்வு) செல்வராஜ், மேலக்குயில்குடி ஊராட்சித் தலைவர் ஜெய்பிரபு கலந்து கொண்டனர்.
உடற்கல்வி இயக்குநர் குமார், துணை உடற்கல்வி இயக்குநர்கள் பார்த்திபன், ஜெயபால், ராமன், சிவகுமார், சொக்கர் கணேஷ், நிம்மி ஜெயதீபா, ராமசாமி ஏற்பாடுகளை செய்தனர்.

