
உசிலம்பட்டி : உசிலம்பட்டி ஆச்சி இன்டர்நேஷனல் பள்ளியில் தமிழ்நாடு, அந்தமான், புதுச்சேரியில் உள்ள சி.ஐ.எஸ்.சி.இ., பள்ளிகளுக்கு இடையேயான யோகா போட்டி நடந்தது.
தலைமை விருந்தினராக மாநிலச் செயலாளர் ஜெயந்தி, இதயம் ராஜேந்திரன் இன்டர்நேஷனல் பள்ளி முதல்வர் நபிஷாதுல் மிஷேரியா, ஆச்சி இன்டர்நேஷனல் பள்ளித் தாளாளர் காசிமாயன், இயக்குநர் ஜெயகிஷோர் குமார், முதல்வர் பாஸ்டின் குமார் பங்கேற்றனர்.
14 வயதிற்குட்பட்ட ஆண்கள் பிரிவில் ஆச்சி இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்கள், பெண்கள் பிரிவில் லிட்டில் ஏஞ்சல் பள்ளி மாணவிகள், 17 வயதிற்குட்பட்ட ஆண்கள் பிரிவில் விருதுநகர் டி.எம்.எம்.மாணிக்கம்நாடார், ஜானகி அம்மாள் பள்ளி மாணவர்கள், பெண்கள் பிரிவில் இதயம் ராஜேந்திரன் பள்ளி மாணவிகள், 19 வயதிற்குட்பட்ட ஆண்கள் பிரிவில் பாரதி பள்ளி பள்ளி மாணவர்கள், பெண்கள் பிரிவில் டி.எஸ்.எம்.மாணிக்கம் நாடார், ஜானகி அம்மாள் பள்ளி மாணவிகள் வெற்றி பெற்றனர்.