/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பூ மார்க்கெட்டில் பென்னிகுவிக் சிலை
/
பூ மார்க்கெட்டில் பென்னிகுவிக் சிலை
ADDED : ஜூலை 06, 2024 06:14 AM
மதுரை : மதுரையில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் மலர் மொத்த வியாபாரிகள் நலச்சங்கம் நிர்வாகிகள் கூட்டம் தலைவர் ராமச்சந்திரன் தலைமையில் நடந்தது. செயலாளர் சிங்கராஜ், பொருளாளர் தர்மர், துணைத் தலைவர் பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தனர். இணைச் செயலாளர் போஸ், துணைச் செயலாளர் கணேஷ்பிரபு பங்கேற்றபர்.
கூட்டத்தில் பூ மார்க்கெட் ஒருங்கிணைந்த வணிக வளாகத்தில் பென்னி குவிக் சிலை வைக்க வேண்டும். வியாபாரிகள், மார்க்கெட் வரும் மக்களுக்கு குடிநீர், கழிப்பறை வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.
நடைபாதை ஆக்கிரமிப்பாக உள்ள கடைகளை அகற்றி வியாபாரிகள், மக்கள் வந்துசெல்லும் வகையில் வழி ஏற்படுத்த வேண்டும். பூ மார்க்கெட் கழிவுகளை விவசாயிகள் எடுத்துச் செல்ல மார்க்கெட் கமிட்டி அனுமதியளிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.