ADDED : ஆக 13, 2024 06:11 AM
மதுரை : மதுரையில் எஸ்.டி.பி.ஐ., கட்சியின் 3 ஆண்டுகளுக்கான நிர்வாகிகள் தேர்வு நடந்தது. தெற்கு தொகுதி தலைவர் பாட்ஷா தலைமை வகித்தார். துணைத்தலைவர் ரியாஜ் வரவேற்றார். செயலாளர் சம்சு அப்துல்லா, அமைப்புச் செயலாளர் இப்ராஹிம் பங்கேற்றனர். மாநில செயற்குழு உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், விமன் இந்தியா மூவ்மென்ட் மாநில பொருளாளர் கத்திஜா, மாவட்ட தலைவர் நஸ்ரத், மண்டல செயலாளர் சிக்கந்தர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
தலைவராக பாட்ஷா, செயலாளராக சம்சு அப்துல்லா, துணைத்தலைவர்களாக வழக்கறிஞர் அபுதாஹிர், அப்துல் லத்தீப், இணைச்செயலாளர்களாக நாகூர் கனி, பாலமுருகன், பொருளாளர் ரியாஜ், செயற்குழு உறுப்பினர்களாக லைலத் பேகம், இப்ராஹிம், ஆசாத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
மாவட்ட தலைவர் சீமான் சிக்கந்தர், பொதுச்செயலாளர் சிராஜ்தீன் தேர்தல் அதிகாரியாக கலந்து கொண்டனர்.

