ADDED : ஏப் 19, 2024 05:30 AM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை சேர்மத்தாய் வாசன் மகளிர் கல்லுாரியில் மாணவப் பேரவை நிறைவு விழா, மலர் வெளியீட்டு விழா நடந்தது.
முதல்வர் கவிதா வரவேற்றார். துணைச் செயலாளர் பாலகுரு விருந்தினரை கவுரவித்தார். சிறப்பு விருந்தினராக யாதவா மகளிர் கல்லுாரி முதல்வர் புஷ்லதா பங்கேற்றார். கல்லுாரி வளர்ச்சிகளின் தொகுப்பான 'கதிர் விருட்சம்' மலரை வெளியிட்டார்.
அனைத்து துறை சார்ந்த மன்ற செயலாளர்கள்ஓராண்டு நிகழ்வுகள் குறித்து ஆண்டறிக்கை சமர்ப்பித்தனர். பேரவை தலைவி வைஷ்ணவி நன்றி கூறினார்.
