ADDED : மே 10, 2026 05:31 PM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை அமெரிக்கன் கல்லுாரியில் 2005 ம் ஆண்டு முதுகலை வணிக மேலாண்மை (எம்.பி.ஏ.,) படித்த மாணவர்கள் 19 ஆண்டுகளுக்குப் பின் சமீபத்தில் ஒன்றிணைந்தனர். தற்போது அவர்களில் பெரும்பாலோர் வங்கி அதிகாரிகள், தொழில் முனைவோர், கணினித்துறைகளில் பணியாற்றுகின்றனர்.
கல்லுாரியில் ஒன்று கூடிய இம்மாணவர்கள் தங்களுக்கு கற்பித்த முன்னாள் பேராசிரியர்கள் சாமுவேல் ஜோசப், அன்புநாதன், ஜோசப் தேவதாசன் மற்றும் தற்போதைய பேராசிரியர்களை கவுரவித்தனர். இந்நிகழ்ச்சிக்கு கல்லுாரி முதல்வர் பால் ஜெயகர் தலைமை வகித்தார். முன்னாள் மாணவர் இயக்குனர் சஹிமேயநாதன் உட்பட பலர் பங்கேற்றனர். கல்லுாரி வளாகத்தை சுற்றி வந்து மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
