ADDED : ஜூலை 13, 2024 04:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை, : மதுரை அவனியாபுரம் சேர்மத்தாய் வாசன் மகளிர் கல்லுாரியில் மாணவியர் ஒன்றிய தொடக்க விழா கல்லுாரித் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. பேராசிரியர் புஷ்பராணி வரவேற்றார்.
முதல்வர் கவிதா, ஒன்றிய உறுப்பினர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பா.ஜ., பொதுச்செயலாளர் ராமஸ்ரீநிவாசன் பேசுகையில், 'தவறு செய்துவிட்டால் அதை ஒப்புக்கொள்ளும் பக்குவம் சிறந்த தலைவனுக்கு அழகு.
சிறப்பான செயல்களை செய்கிற அனைவரும் பாராட்டப்பட வேண்டும். அனைவரின் கருத்துகளையும் கேட்க வேண்டும். நன்றி சொல்லிப் பழக வேண்டும்' எனப் பேசினார். மாணவியர் ஒன்றியத் தலைவர் ஹரிணி நன்றி கூறினார்.

