ADDED : ஆக 28, 2024 04:36 AM
அ நிறம் | அளவு
மேலுார் : மதுரையில் ஆலன் - திலக் சர்வதேச கராத்தே பள்ளி சார்பில் மாநில கராத்தே ஓப்பன் சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது.
இதில் மேலுார் டாட்கோ பள்ளி மாணவர்கள் சமீம் அகமது, தன்சிக் அஸ்லம், கதீஜா, கார்த்திகேயன், முகமது ஹனீபா உள்ளிட்டோர் கட்டா, குமிட்டே போட்டியில் பல்வேறு பரிசுகளை வென்றனர். அவர்களுக்கு பள்ளி நிர்வாகி ராமமூர்த்தி தகுதி சான்றிதழ், பதக்கங்களை வழங்கினார். சாம்பியன்ஷிப் கோப்பையை பெற்ற மாணவர்களை பயிற்சியாளர் முஜிபுர் ரஹ்மான், பள்ளி முதல்வர் ஜாஹிர்உசைன் பாராட்டினர்.
