ADDED : ஆக 07, 2026 06:53 PM
அ நிறம் | அளவு
எழுமலை: அத்திபட்டி ராமையா நாடார் பள்ளியில் குறுவட்ட விளையாட்டுப் போட்டிகள் நடந்தன.
இதில் எழுமலை பாரதியார் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் பல்வேறு போட்டிகளில் ஆண்கள் பிரிவில் மொத்தம் 99 புள்ளிகள் பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் பெற்றனர். 17 வயதுக்குட்பட்டோர் பிரிவில் மணிகண்டன், தேவேஷ்குமார், 19 வயதுக்குட்பட்டோர் பிரிவில் ஜெகநாத், ஜெயவிக்னேஷ் ஆகியோர் அதிக புள்ளிகள் பெற்று தனிநபர் சாம்பியன்களாக தேர்வாகினர். பெண்கள் பிரிவில் அத்திபட்டி ராமையாநாடார் பள்ளி மாணவியர்கள் 92 புள்ளிகள் பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் பெற்றனர். 2024 முதல் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக ஒட்டுமொத்த சாம்பியன் பெற்ற மாணவர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், பயிற்சியாளர்களை தாளாளர் பொன்கருணாநிதி, முதல்வர் ஆறுமுகசுந்தரி, ஆசிரியர்கள் பாராட்டினர்.
