/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
'ரோட்டில் சைக்கிள் ஓட்ட முடியல' முதல்வருக்கு மாணவி கடிதம்
/
'ரோட்டில் சைக்கிள் ஓட்ட முடியல' முதல்வருக்கு மாணவி கடிதம்
'ரோட்டில் சைக்கிள் ஓட்ட முடியல' முதல்வருக்கு மாணவி கடிதம்
'ரோட்டில் சைக்கிள் ஓட்ட முடியல' முதல்வருக்கு மாணவி கடிதம்
ADDED : மார் 11, 2025 05:14 AM
உசிலம்பட்டி: ''உசிலம்பட்டி - வத்தலக்குண்டு ரோட்டில் அன்னம்பாரிபட்டி வரை ரோடு மேடு, பள்ளங்கள் நிறைந்து இருப்பதால் சைக்கிள் ஓட்ட முடியவில்லை. சரி செய்ய முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என 9ம் வகுப்பு மாணவி நீ.இளமதி தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு எழுதிய கடிதம் வைரலாகி வருகிறது.
உசிலம்பட்டி - வத்தலக்குண்டு ரோடு சீரமைக்கப்பட்டு பல ஆண்டுகளாகிவிட்டது. இக்காலங்களில் மேடு பள்ளங்களாக ரோடு உருமாறியுள்ளது.
இதில் நகர் போலீஸ் ஸ்டேஷன் பகுதியில் இருந்து அன்னம்பாரிபட்டி வரையில் ரோடு பல ஆண்டுகளாக சரிசெய்யப்படாமலேயே உள்ளது. அவ்வப்போது நெடுஞ்சாலைத் துறையினர் பள்ளங்களில் மண், ஜல்லிக்கற்கள், குவாரி மண்துகள்களை கொட்டி வைத்துள்ளனர். இதனால் புழுதி மண்டலமும், கூடுதலான பள்ளங்களும் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் அன்னம்பாரிபட்டி ஒன்பதாம் வகுப்பு மாணவி, 'நான் பள்ளிக்கு சைக்கிளில் சென்றுவந்தேன். தற்போது ரோடு சரியில்லாமல் போனதால் ஆட்டோவில் செல்கிறேன்.
இந்த வழியாக அரசியல் தலைவர்கள், அதிகாரிகள் சென்று வருகின்றனர். ஆனால் ரோட்டை சரிசெய்ய நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர். முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என தெரிவித்துள்ளார்.