/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
25 ஆண்டுகளுக்கு பின் சந்தித்த மாணவர்கள்
/
25 ஆண்டுகளுக்கு பின் சந்தித்த மாணவர்கள்
ADDED : ஜூலை 21, 2024 05:05 AM
திருப்பரங்குன்றம்: மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லுாரியில் 1995--99ம் ஆண்டு படிப்பை முடித்த மாணவர்கள் 135 பேர், 25 ஆண்டுகளுக்கு பின்பு நேற்று குடும்பத்துடன் சந்தித்து மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கு முதல்வர் பழனிநாதராஜா தலைமை வகித்தார். முன்னாள் மாணவர் சங்க ஒருங்கிணைப்பு செயலாளர் பாலசுப்பிரமணியன், இணைச் செயலாளர் புஷ்பராஜன், பொருளாளர் மொக்க மாயன் முன்னிலை வகித்தனர். ஏழை மாணவர்களின் கல்வி நிதியாக முன்னாள் மாணவர்கள் ரூ.19.99 லட்சம் வழங்கினர்.
அவர்கள் கூறுகையில், ''எங்களில் பலர் வெளிமாநிலம், வெளிநாடுகளில் பணியாற்றுகின்றனர். தற்கால தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப பொறியியல் படிப்புகளில் பாடத்திட்ட மாதிரிகளை வடிவமைத்து கொடுத்துள்ளோம்.
அதில் சில மாதிரிகள் மின்னணு மற்றும் தொடர்பியல் துறையில் பாடமாக இடம் பெற்றிருப்பது மகிழ்ச்சி'' என்றனர்.
இணை டீன் கார்த்திகேயன் ஒருங்கிணைத்தார்.