/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
முப்பது ஆண்டுகளுக்கு பின் சந்தித்த மாணவர்கள்
/
முப்பது ஆண்டுகளுக்கு பின் சந்தித்த மாணவர்கள்
ADDED : ஜூன் 30, 2024 04:54 AM

திருப்பரங்குன்றம் : மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லுாரியில் 1991--95ம் ஆண்டு படிப்பை முடித்த மாணவர்கள் 85 பேர் 30 ஆண்டுகளுக்கு பின்பு குடும்பத்தினருடன் சந்தித்து நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
கல்லுாரி இயக்குனர் அபய்குமார் தலைமை வகித்தார். முதல்வர் பழனி நாதராஜா முன்னிலை வகித்தார். முன்னாள் மாணவர் சதீஷ்குமார் வரவேற்றார். முன்னாள் மாணவர்கள் சார்பில், இந்நாள் ஏழை மாணவர்களின் கல்வி நிதிக்காக, ரூ. 16 லட்சம் வழங்கினர். பேராசிரியர் கார்த்திகேயன் ஒருங்கிணைத்தார்.
முன்னாள் மாணவர்கள் கூறுகையில், ''படித்து முடித்த 25ம் ஆண்டில் கொரோனா வந்ததால் காணொலி காட்சியில் சந்தித்தோம். எங்களில் பலர் அமெரிக்கா, இங்கிலாந்து, துபாய், மலேசியா, இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பணியாற்றி வருகின்றனர்.
எங்களுக்கு பொறியியல் கற்பித்த பேராசிரியர்களுக்கு மரியாதை செய்யவும், வசதியற்ற மாணவருக்கு உதவவும் இந்த சந்திப்பு நிகழ்ச்சி உதவுவதால், ஆண்டுதோறும் சந்திக்க முடிவு செய்துள்ளோம் என்றனர்.