நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: காரைக்குடி சேது பாஸ்கரா வேளாண் கல்லுாரி 4ம் ஆண்டு மாணவர்கள் ஊரக வேளாண்மை பணி அனுபவத் திட்டத்தின் கீழ் மதுரை அலங்காநல்லுார் சுற்றியுள்ள கிராமங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.
விவசாயிகளின் தோட்டத்திற்கு சென்று பயிரிடும் முறையை கேட்டறிந்தனர். இயற்கை வேளாண்மை மற்றும் பயிர் நோய்களுக்கான ஆலோசனை வழங்கினர். மாணவர்கள் கவுதம், ஹேமந்த், நித்திஷ் குமார், பத்மநாபன், சக்தி பாலாஜி, சுஜித், விக்னேஷ் கலந்துகொண்டனர்.

