ADDED : ஜூன் 28, 2026 11:02 PM
அ நிறம் | அளவு
பேரையூர்: பாப்பையாபுரம், ராமநாதபுரம், பாப்பிரெட்டிப்பட்டி, சிலைமலைப்பட்டி பகுதியைச் சேர்ந்த ஏராளமாான மாணவர்கள் பேரையூரில் படிக்கின்றனர். இவர்கள் மாலையில் வீடு திரும்புவதற்கு மட்டும் பஸ் வசதி உள்ளது. காலையில் பள்ளி செல்வதற்கு பஸ் வசதி இல்லை. விருதுநகரில் இருந்து பேரையூருக்கு சுப்புலாபுரம் வழியாக காலை 6 மணிக்கும் 10 மணிக்கும் அரசு பஸ் வருகிறது.
பள்ளிக்கு செல்லும் நேரத்தில் பஸ் இல்லாததால் காலையில் 5 கி.மீ., நடந்து சென்று மாலையில் பஸ்சில் வரும் நிலை உள்ளது. இதனால் மாணவிகள் படிப்பை நிறுத்தும் நிலை உருவாகிறது. மாணவர்கள், பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு காலையில் பள்ளி நேரத்தில் இந்த வழித்தடத்தில் அரசு பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
