/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மாநில ஸ்கேட்டிங்கில் சாதித்த மாணவர்கள்
/
மாநில ஸ்கேட்டிங்கில் சாதித்த மாணவர்கள்
ADDED : செப் 04, 2024 06:57 AM

பாலமேடு : தமிழ்நாடு மற்றும் திருச்சி மாவட்ட ஸ்கேட்டிங், கோ கோ அசோசியேஷன் சார்பில் மாநில ஓபன் சாம்பியன்ஷிப் போட்டிகள் திருச்சியில் நடந்தது.
பல்வேறு மாவட்டங்களில் இருந்து 11, 14, 17, 19 வயது பிரிவுகளில் 30 அணிகளுக்கும் மேல் பங்கேற்றன.
பாலமேடு ஜெராஜ் ஸ்பீட் ஸ்கேட்டிங் அகாடமி மற்றும் மதுரை பாலையம்பட்டி நாடார் உறவின்முறை சங்கர நாராயணன் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் 11 வயது பிரிவில் தமிழரசன், அஸ்வின், தில்லேஷ் பிரபு, மதிவதனன், ரகுநந்தன், கவுசிக்ராம், ஹரிகிரித்தீஷ், மில்லன் சாய், ஹரிஷ், 17 வயது பிரிவில் ஆனந்தபிரவின், மோகனரூபன், கயிலை ராஜன், கிருஷாந்த், தியாஷ், பிரஜீத்குமார், நிர்மல், அகிலேஷ், அரவிந்தன், 19 வயது பிரிவில் இமதுல்லா, அஜய்பாண்டி, சரவணபாண்டி, வெற்றிச்செல்வன், பவன், ரோகித் தங்கம் வென்றனர்.
தமிழ்நாடு ஓவர் ஆல் சாம்பியன்ஷிப் பட்டம் வென்று 2ம் இடம் பிடித்தனர்.