ADDED : ஜூன் 11, 2026 05:01 PM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா குறித்து முன்னேற்பாடு ஆய்வுக் கூட்டம் அமைச்சர் ரமேஷ் தலைமையில் கோயிலில் நடந்தது.
கலெக்டர் ஆகாஷ் முன்னிலை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் அன்பழகன், போலீஸ் துணை கமிஷனர் இனியோ திவ்யன், உதவி கலெக்டர் (பயிற்சி) சித்தார்த் போகர்னா, கோயில் இணை கமிஷனர் சுரேஷ், அறங்காவலர் குழுத் தலைவர் ருக்மணி பழனிவேல்ராஜன் பங்கேற்றனர். விழா பணிகளை விரைந்து முடிக்க அமைச்சர் உத்தரவிட்டார்.
