/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மானியத்தில் தக்கைப்பூண்டு பசுந்தாள் உர விதைகள்
/
மானியத்தில் தக்கைப்பூண்டு பசுந்தாள் உர விதைகள்
ADDED : செப் 07, 2024 05:43 AM
பேரையூர்: சேடபட்டி வேளாண் உதவி இயக்குனர் ராமசாமி கூறியதாவது: பசுந்தாள் உரங்கள் சாகுபடி செய்து மண்ணில் உழுது மட்கச் செய்யும் போது மண்ணின் அங்கக அமிலம் உருவாகி மண்ணின் கார்பன் சந்தை அதிகரித்து நுண்ணுயிர்களின் எண்ணிக்கையை பெருக்குகிறது. நுண்ணுயிர் பாக்டீரியாக்கள் வளிமண்டல நைட்ரஜன் சத்தை வேர்முடிச்சுகளில் நிலை நிறுத்துகிறது.
பசுந்தாள் செடிகளை மடக்கி உழுவதன் மூலம் வேர்முடிச்சுகளில் உள்ள நைட்ரஜன் சத்தை மண்ணிற்கு கிடைக்கச் செய்யலாம். மேலும் நாம் இடும் செயற்கை ரசாயன உரங்களை பயிர்கள் எடுத்துக் கொள்ளும் நிலைக்கு மாற்றுவதற்கு நிலத்தில் நுண்ணுயிர்கள் அவசியம். இல்லையேல் இடும் உரங்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டும் ஆவியாகியும் வீணாகி விடும். பசுந்தாள் உரம் இயற்கை வேளாண்மையில் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
பசுந்தாள் உரம் மண்ணின் கட்டமைப்பை மேம்படுத்துகிறது. நீர் தேக்கும் திறனை அதிகரிக்கிறது மற்றும் மண் அரிப்பால் ஏற்படும் இழப்பை குறைக்கிறது. பயிர்கள் எதுவும் பயிரிடப்படாத பருவத்தில் வளர்க்கப்படும் இந்த பசுந்தழை பயிர்களால் களைச் செடிகளின் வளர்ச்சியைக் குறைக்கலாம் மற்றும் காரத் தன்மையுள்ள மண்ணைச் சீர்திருத்துவதற்கு உதவுகிறது. இதன் மூலம் வேர் முடிச்சு நுாற்புழுக்களைக் கட்டுப்படுத்தலாம். சேடபட்டி வட்டாரம் வேளாண்மை விரிவாக்க மையத்தில் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் தக்கைப்பூண்டு விதை 50 சதவீத மானியத்தில் வழங்கப்படுகிறது என்றார்.