தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மானியத்தில் விதை நெல்

மானியத்தில் விதை நெல்

மானியத்தில் விதை நெல்


ADDED : ஆக 02, 2024 04:58 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 02, 2024 04:58 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் விதை நெல் வகைகள் 50 சதவீத மானியத்தில் வழங்கப்படுகிறது.

உதவி இயக்குனர் மீனாட்சிசுந்தரம் கூறியதாவது: தேசிய வேளாண் வளர்ச்சி திட்டம், விதைக் கிராம திட்டம் சார்பில் சம்பா பருவத்திற்கு தேவையான நெல் விதைகள் மானியத்தில் வழங்கப்பட்டு வருகிறது.

பி.பி.டி. 1504, ஆர்.என்.ஆர். 15048, கோ 55, பி.கே.என். 13, என்.எல்.ஆர். 34449 ஆகிய உயர் விளைச்சல் தரும் நெல் ரகங்கள் 50 சதவீத மானியத்தில் வழங்கப்படுகிறது. இத்துடன் மகசூலை 20 சதவீதம் அதிகரிக்க, நெற் பயிருக்கு மிகவும் அவசியமான, துத்தநாகம், போரான், காப்பர் நுண்ணுாட்ட உரங்கள், திரவ உயிர் உரங்களும் 50 சதவீத மானியத்தில் வழங்கப்படுகிறது. விவசாயிகள் திருநகர் 2வது பஸ் நிறுத்த பகுதியில் உள்ள வேளாண் அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம் என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us