ADDED : ஏப் 18, 2024 05:29 AM
அலங்காநல்லுார்: நுண்ணீர் பாசனம் அமைக்க சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியம் வழங்கப்படுகிறது.
அலங்காநல்லுார் வட்டார வேளாண் உதவி இயக்குனர் மயில் கூறியிருப்பதாவது : இவ்வட்டாரத்தில் தெளிப்பான் அமைப்பில் ஒரே சீராக நீர் விநியோகிக்கப்படுகிறது. இந்த முறை செயல்பட குறைந்த வேலை ஆட்கள் போதுமானது.
தெளிக்கும்போது கரையக்கூடிய உரங்கள், பூஞ்சை கொல்லிகள், களைக் கொல்லிகளை பயிர்களில் தெளிப்பதற்கு முன் தண்ணீரில் கூடுதலாக சேர்க்கலாம். ஸ்ப்ரிங்க்லர் சிஸ்டம் மூலம் தண்ணீர் தெளிக்கும் போது செடிகளின் மேற்பரப்பில் உள்ள துாசி துகள்களை நீக்குகிறது.
இம்முறை மூலம் 40 முதல் 50 சதவீத தண்ணீரை சேமிக்க முடியும். சிறுகுறு விவசாயிகளுக்கு 100 சதவீதம், பெரு விவசாயிகளுக்கு 75 சதவீதம் மானியத்தில் வழங்கப்படுகிறது. கூடுதல் தகவலுக்கு வேளாண் வட்டார அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என்றார்.
முன்னதாக பாலமேடு விவசாயி ரவி வயலில் நிலக்கடை பயிரில் நுண்ணீர் பாசன தெளிப்பு முறையை வேளாண் துணை இயக்குனர் (நுண்ணீர் பாசனம்) தனலட்சுமியுடன், உதவி இயக்குனர்கள் கிருஷ்ணா, சேது பாஸ்கரா, வேளாண் கல்லுாரி மாணவர்கள் பார்வையிட்டனர்.

