ADDED : மார் 05, 2025 05:51 AM

மதுரை: மேலுார் பூதமங்கலத்தில் அரசு தொழிற்பேட்டை பணியை துரிதப்படுத்தக்கோரி மதுரை கலெக்டர் அலுவலகம் முன் கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
துணைத் தலைவர் பழனிசாமி தலைமை வகித்து பேசியதாவது: 400 ஏக்கரில் தொழிற்பேட்டை இடத்தை ஆக்கிரமிப்பு செய்து சிலர் வீடு கட்டியுள்ளனர். இந்த இடத்தில் பலஆண்டுகளுக்கு முன்பாக அரசு சார்பில் கூட்டுறவு சங்கம் அமைத்து 4 ஆண்டுகள் தொடர்ந்து விவசாயம் செய்யப்பட்டது. அதுதோல்வியில் முடிந்தது. ஆக்கிரமிப்பாளர்கள் அந்த இடத்தை பல்லுயிர் தலமாக அறிவித்து இந்த திட்டத்தை ரத்து செய்ய கோரிக்கைவைக்கின்றனர்.
அங்கு விவசாயம் செய்வதற்கும், கால்நடைகள் வளர்ப்புக்கும் ஏற்றதாக இல்லை. இங்குள்ள பலர் வேலை வாய்ப்பு இல்லாதகாரணத்தால் புலம் பெயர் தொழிலாளர்களாக உள்ளனர். இத்திட்டத்தை அரசு தொடங்கி எங்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும்.வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என்றார்.
கலெக்டரிடம் மனு அளித்தனர். சங்க பொருளாளர்ராஜாமணி,மாவட்ட விவசாயிகள் சங்க செயலாளர் இளங்கோவன்,ஓய்வுபெற்ற தாசில்தார் மணி, பூதமங்கலம் கிராமத்தினர் பங்கேற்றனர்.