நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரையில் நேற்று முன்தினம் அனல் பறக்கும் வெயில் கொளுத்தியது. மக்கள் மதிய நேரத்தில் வெளியில் தலைகாட்டவே தயங்கினர். இந்நிலையில் மாலை 6:00 மணி அளவில் பல இடங்களில் மழை பெய்தது. மதுரை மாவட்டத்தில் சராசரியாக 5.45 மி.மீ., அளவு மழை பொழிந்தது.
விமானநிலைய பகுதியில் 0.50, விரகனுார் 1.20, மதுரை வடக்கு 13.40, கள்ளந்திரி 1, தல்லாகுளம் 8, சாத்தையாறு அணை 45, மேட்டுப்பட்டி 20.20, பேரையூர் 30.6 என்ற அளவில் பெய்தது. பெரியாறு அணையில் 114.85 அடி, வைகை அணையில் 56.59 அடி, சாத்தையாறு அணையில் 9.50 அடி நீர்மட்டம் உள்ளது.